சேலம் மண்டல சி.பி.எ.ஸ்.சி பள்ளிகளுக்கிடையேயான ஹேண்ட்பால் போட்டி சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் நடைப்பெற்றது. இதன் இறுதி சுற்றில் வித்யா மந்திர் பள்ளியும், சேர்வராய்ஸ் பள்ளியும் மோதியது.
இதில் வித்யா மந்திர் பள்ளி முதலிடத்தையும், சேர்வராய்ஸ் பள்ளி இரண்டாமிடத்தை பிடித்தது. சேர்வராய்ஸ் பள்ளி இத்தகைய போட்டிகளில் கலந்துக்கொள்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
இரண்டாம் இடம் பிடித்த மாணவிகளுக்கு சேர்வராய்ஸ் குழும தலைவர் மற்றும் சேர்வராய்ஸ் பள்ளி தாளாளர் தேவதாஸ் மற்றும் பள்ளி முதல்வர் சாந்தகுமார் ஆகியோர் பாராட்டினர்.
-நவீன் குமார்.