தீவிரவாதி என சந்தேகப்பட்ட நபரை கொன்று சாப்பிட்ட கொடுமை!

congo congo1ஆப்ரிக்காவின் காங்கோவில் தீவிரவாதி என சந்தேகப்பட்ட ஒரு நபரை பொதுமக்கள் சேர்ந்து அடித்து கொன்றதுடன், சமைத்து சாப்பிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் உள்ள கம்பியா சூ(Gambiya shu) என்ற கிராமத்தில் ‘எ.டி.எப்.’ (ADF)என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பெனி(Beni) நகரில் பேருந்தில் பயணித்த பொதுமக்கள், அவர்களுடன் பயணித்த நபர் ஒருவரின் மீது சந்தேகமடைந்துள்ளனர்.

எனவே, அவனிடம் தங்களது மொழியில் பல கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளனர், ஆனால் அவன் பதில் ஏதும் கூறிவில்லை.

இதனால் அவன் தீவிரவாத குழுவை சேர்ந்தவன் என நினைத்த மக்கள், அவனை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளியுள்ளனர்.

இதன்பின் கல்லால் அடித்து கொன்று, அவனை எரித்ததுடன், அந்த உடலின் சில பாகங்களை சாப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே அடித்து கொல்லப்பட்ட ஜோசப் கபிலா (Joseph kabila) என்ற நபர் தீவிரவாதியா? என போலிஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-ஆர்.மார்ஷல்.