ஏற்காடு டவுன் பகுதியில் உள்ளது ‘அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி’ எனும் தனியார் பள்ளி. இங்கு 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளியில் இருந்து நீக்கியதாகவும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி பள்ளி முதல்வர் ரோஷன் டிகோஸ்டா என்பவர் நேற்று (01.11.2014) மதியமே அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளியை இன்று (02.11.2014) முற்றுகையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்வர் ரோஷன் பெற்றோர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் உடனடியாக ஏற்காடு தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சாந்தி, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்க்க சம்மதித்ததால் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டு சென்றனர்.
-நவீன் குமார்.