சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவில் இன்று காலை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பேரணி ஏற்காடு தாசில்தார் சாந்தி தலைமையில் நாசரேத் பள்ளியில் துவங்கியது.
பேரணி காந்தி பூங்கா, பஸ் நிலையம், அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களை கடந்து ஒண்டிக்கடை பகுதியில் நிறைவடைந்தது.
பேரணியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட 38 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
-நவீன் குமார்.