ஏற்காட்டில் வருடா வருடம் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி டிசம்பர் மாதம் நடைப்பெறும். அதன்படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள இரண்டாம் சீசன் மலர் கண்காட்சிக்கு ஏற்காடு ரோஜா தோட்டத்தில் மலர் செடிகள் தயார் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
இங்கு பெட்டுணியா, மேரி கோல்டு, ஜெனியா, விண்கா, சால்வியா, ஆகிரெட்டம், ஃபிலாக்ஸ், செலோசியா, பேண்சி, எலிகிரேஷன், கசாந்தியா, வெர்பிணியா, கேலண்டவிலா, ஆஸ்டர், உள்ளிட்ட 14 வகையான செடிகள் தொட்டிக்கு 3 வீதம், 5000 தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும், இன்னும் ஒரு மாதத்திற்குள் மேலும் 5000 தொட்டி செடிகள் புதிதாக தயார் செய்யப்படும் என்றும் தோட்ட கலை துறை துணை இயக்குநர் கண்ணன் கூறினார்.
-நவீன் குமார்.