சட்ட விழிப்புணர்வு முகாம்!

DSCF9124 DSCF9105தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சட்ட உதவி மையத்தின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதா (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

ஏராளமான மாணவிகள் கலந்து கொண்ட இம் முகாமில், கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜ் சிறப்புரை ஆற்றினார். மூத்த வழக்கறிஞர்கள் ராமசாமி, முத்துராமலிங்கம், சந்திரசேகர், முருகானந்தம், மோகன்தாஸ், கனிராஜ், கார்த்திபராஜ், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சட்டம் பற்றி உரையாற்றினர்.

வழக்கறிஞர்கள் பாலமுருகன், மோகன்ராஜ், அருள், தனபால்ராஜ், விஜயசொர்ணமுத்து, செல்வக்குமார் ஆகியோர் சட்ட முகாமில் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.

-கோ.சரவணக்குமார்.