கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் வை.புதூர் அருகில் இரட்டைவாய்க்கால் பாலம் உள்ளது. இப்பாலத்தின் தடுப்பு கம்பிகள் சேதமடைந்து எந்த வித பாதுகாப்பும் தடுப்பும் இன்றி பல வருடங்களாக இருந்து வருகிறது. இதனால் பல முறை இந்த பாலத்திலிருந்து தடுமாறி பல வாகனங்கள் வாய்க்கால் உள்ளே விழுந்துள்ளது.
அந்த பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களுக்கும், நடந்து செல்லும் மக்களுக்கும் இப்பாலம் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.
இதுக்குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இப்பாலம் இதுவரை சரி செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, காலதாமதம் செய்யாமல் பாலத்தின் தடுப்பு சுவர் அமைத்து பாதுகாப்பை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் இப்பாலத்தால் மிகப் பெரிய உயிர்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
-பன்னீர்.