திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில், ஊரக மற்றம் நகர்புற பகுதியில் நடைபெற்றும் வரும் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கம் ஒன்றியம் மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பள்ளி சுற்றுசூழலை பார்வையிட்டு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பு திறனை ஆய்வு செய்தார்.
பின்னர் அனைத்து மாணவர்களும் வாசித்தல் மற்றும் எழுத்து திறனில் சிறப்பான முறையில் உள்ளனர் என்றும், மாணவர்கள் கற்றலில் முழு அடைவுதிறனை பெற்றிருக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளியில் கட்டபட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் சத்துணவு மையத்தைப் பார்வையிட்டார்.
நிகழ்வின் போது செங்கம் ஒன்றிய குழுத்தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் காந்தி சின்னகுழந்தை, மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
– செங்கம் மா.சரவணக்குமார்.