சேலம் மாவட்டம், ஏற்காடு படகு இல்ல சாலை, நாகலூர் சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளால் போக்குவரத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் ஆலோசனையின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி சேலம் மாவட்ட கோட்டாட்சியர் லலிதா குமாரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி ஆகியோர் ஏற்காடு காவல் துறையினரின் உதவியுடன் லாரிகளை அப்புறப்படுத்தினர்.
இதனால் லாரிகள் நிறுத்த வேறு இடம் கோரி, லாரி உரிமையாளர்கள் தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் பல மனுக்களை அளித்தனர். இவ்வாறாக இந்த ஒரு மாதம் கடந்த நிலையில், லாரி உரிமையாளர்கள் மீண்டும் லாரிகளை சாலையோரங்களில் நிறுத்தி வருகின்றனர்.
இதனால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
-நவீன் குமார்.