திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஆர். வனரோஜா குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
பிறகு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஒன்றிய தலைவரும் மேல்புழுதியூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் காயம்பட்டு சித்ரா ரவிக்குமார், குப்பநத்தம் ஜெயபிரகாஷ், வளையாம்பட்டு சிவக்குமார், மேல்செங்கம் குப்பன், தாழையூத்து பொன்னையன், ஒன்றிய கவுன்சிலர்கள் சடையன், குமார், மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர்கள் ஜோதி கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர்கள் முருகன், ஜெகதீசன், ஆறுமுகம், சங்கர், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எ.ஜி.ராஜா, பேரவை மாவட்ட துணைத் தலைவர் பன்னீர், பேரூராட்சி உறுப்பினர் கலையரசி சரவணன், அந்தனூர் கோவிந்தன், டீக்கடை ராஜாமணி உள்ளிட்ட நிர்வாகிகளும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
– செங்கம் மா.சரவணக்குமார்.