செங்கம் அடுத்த இறையூர், தொராப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் இறையூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அட்டையில் பெயர் சேர்த்தல், முதியோர் உதவி தொகை, கணவனால் கைவிடபட்டவர் உதவி தொகை உள்ளிட்ட 130 மனுக்களை அளித்தனர். இவற்றை பரிசீலித்த வருவாய் துறை அதிகாரிகள் தகுதி வாய்ந்த 80 பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகள் வழங்கபட்டன.
நடைபெற்ற அம்மா திட்ட முகாமிற்கு இறையூர் ஊராட்சி மன்ற தலைவர் இறைமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வணிகவரி துறை ஆலோசனை குழு உறுப்பினர் சுந்தரமுர்த்தி முன்னிலை வகித்தார். செங்கம் தாசில்தார் தினகரன் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயபிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
– செங்கம் மா.சரவணக்குமார்.