ஸ்ரி மந்திர் ஜெய்ன் மான்டல் அமைப்பை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான, அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலை, சேர்வராயன் கோவில், சந்தை , வண்டி ராமர் கோவில் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்தனர்.
இதில் சிறுவயது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவரும் கலந்துக் கொண்டனர். இவர்கள் ஏற்காடு டாஸ்மார்க் கடை வளாகத்தையும் சுத்தம் செய்தனர்.
இவர்கள் சுத்தம் செய்யும் போது நம் இந்தியா!, சுத்தமான இந்தியா! என்ற கோஷங்களை எழுப்பியபடி ஒண்டிக்கடை முதல் படகு இல்லம் வரை ஊர்வலமாக வந்தனர்.
இப்பணிக்கு இந்த அமைப்பின் தலைவர் முகேஷ், மற்றும் செயலாளர் நித்தேஷ், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
-நவீன் குமார்.