ஏற்காடு ஆர்.சி மற்றும் சி.எஸ்.ஜ. தேவாலயங்களில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. காமராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மாநில துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
பிரார்த்தனையின் போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா சிறையில் இருந்து வெளிவந்ததிற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும், மேலும் வழக்கில் இருந்து இவர் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரார்தனை செய்தனர்.
இந்த பிரார்தனையில் ஏற்காடு துணை சேர்மேன் சுரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஒன்றிய இணை செயலாளர் ஜான்சி ஆரிப்பால், முன்னால் ஒன்றிய செயலாளர் பிலிப்பான், புகழேந்தி, மனோ, சிவா, பாலு,உள்ளிட்ட பல அ.தி.முகவினர் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.