உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, 2ஜி ஒதுக்கீடு ஊழல் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட 17 பேருக்கு எதிரான இந்த வழக்கில், இன்று இறுதி வாதங்கள் துவங்கவிருந்த நிலையில், ஆவணங்களை படித்துப் பார்க்க கால அவகாசம் தேவை என்று அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் அவகாசம் கேட்டதையடுத்து, வரும் டிசம்பர் 19-ம் தேதி இறுதி வாதம் துவங்கும் என டில்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in