திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது.
செங்கம் சக்தி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்.வழக்கறிஞர் பிராபாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார.
சிறப்பு விருந்தினராக வட்டாட்சியர் (ஒய்வு) ஏ.எஸ்.சுப்பரமணியன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட போட்டி நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் ஜவஹர்லால் நேரு அவர்களின் உடை அணிந்து பேசியது அனைவரையும் அசத்தியது. முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.
இதே போன்று, காயம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தேவிபுஷ்பா அனைவரையும் வரவேற்று பேசினார.
பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் மற்றும் வட்டார மேற்பார்வையாளர்;(ஒய்வு) சி.மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினர்.
குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பள்ளி உதவி ஆசிரியர் சுந்தர விநாயகம் நன்றி கூறினார்.
இதே போன்று, பிஞ்சுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார. சிறப்பாக கொண்டாடபட்டது.
பள்ளி உதவி ஆசிரியர் ராஜவேலு அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக செங்கம் உதவி தொடக்க கலவி அலுவலர் லோகநாயகி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கலவி அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
– செங்கம் மா.சரவணக்குமார்.