மாவட்ட கூட்டுறவு வார விழா : மரக்கன்றுகள் நட்டனர்!

IMAGE 01

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட 61-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். செங்கம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவரும், செங்கம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளருமான மதியழகன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி. கனகராஜ் கூட்டுறவு கொடியினை ஏற்றிவைத்து விழாவினை தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் வே.பெரியசாமி கூட்டுறவு உறுதிமொழியினை வாசித்தார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அமலதாஸ் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார்.

விழா முடிவில் கூட்டுறவு சார்பதிவாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

விழாவில் துணைப்பதிவாளர்கள் நந்தகுமார். சரவணன், மாலதி, முனிராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் நீப்பத்துறை ஜெகதீசன், மேல்பள்ளிப்பட்டு சங்கர், குயிலம் சங்கர், மேல்ராவந்தவாடி தசரதன், அரட்டவாடி குமார், குப்பநத்தம் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் வேல்முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி, மகேஸ்வரி, விஜயகுமாரி, தொப்பளான், சேட்டு, முத்து, பச்சையப்பன், ராஜவேலு, சண்முகம், முதுநிலை உதவியாளர் பத்மநாபன், உதவி செயலாளர் சித்ரா, காசாளர் அழகேசன், எழுத்தர் ராமமூர்த்தி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் இருந்து செயலாளர்கள், நிர்வாகிள் கலந்து கொண்டனர்.

– செங்கம் மா.சரவணக்குமார்.