ஏற்காட்டில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆலோசணை கூட்டம் : முன்னாள் எம்.பி. தேவதாஸ் தலைமையில் நடைப்பெற்றது!

 ye1611P4

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆலோசணை கூட்டம் முன்னாள் எம்.பி. தேவதாஸ் தலைமையில் நடைப்பெற்றது. சுசீந்திர குமார், முன்னாள் எம்.எல்.. அன்பழகன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.கந்தசாமி சிறப்புரை ஆற்றினார்.

முன்னாள் எம்.பி.தேவதாஸ் பேசும்போது, மூப்பனார் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சில ஆண்டுகளாக மூப்பனார் பொறுப்பில் இருந்து வந்தது. அவர் இறந்த பிறகு கட்சியை ஜி.கே.வாசன் நடத்தி வந்தார்.

பின்னர் காங்கிரஸ் உடன் தனது கட்சியை இணைத்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை பிடிக்காததால் காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் துவக்கி உள்ளார்.

இக்கட்சியில் எளிமை , நேர்மை, வாய்மை, உள்ளது. இந்த கட்சியின் மாபெரும் மாநாடு வரும் 28 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கட்சியினர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, நாமும் திரளாக சென்று கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அங்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த குரலாக ஜி.கே.வாசனின் குரல் ஒலிக்கும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஏற்காடு பகுதியை சேர்ந்த பொறுப்பாளார்கள் சிவராஜ், அகஸ்டின், பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.      

– நவீன் குமார்.