காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்தபோது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பதவி இழந்ததுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஸ்வான் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடியை வழங்கியது. இது கடனாக பெறப்பட்டு பின்னர் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது என ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த பண பரிமாற்றம் சட்ட விரோதமாக நடந்திருப்பதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்கள் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி, மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் சரத்குமார் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, இந்த வழக்கில் குற்றச்சாட்டும் பதியப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி வாதம் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் இன்று (17.11.2014) துவங்கியது.
இன்றைய விசாரணையை முன்னிட்டு ராசா நீதிமன்றத்தில் ஆஜரானார். கனிமொழி ஆஜராகவில்லை.
இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்ற விசாரணையின் முழு விபரம், நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர் துரைபெஞ்சமின்,
ஆசிரியர்.