செங்கம் கிளைச் சிறையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆய்வு!

IMAGE 01

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளைச்சிறையில் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் வ. கருப்பண்ணன் வருடாந்திர ஆய்வு செய்தார்.

மேலும், செங்கம் கிளைச்சிறை வளாகத்தில் கிளைச்சிறையின் வரலாற்று கல்வெட்டினை திறந்துவைத்தார்.

பின்னர் கிளைச் சிறை அலுவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அதில் பங்கு பெற்ற காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் செங்கம் கிளைச் சிறை அலுவலர்கள், காவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

– செங்கம். மா.சரவணக்குமார்.