திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 57 ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கொடியேற்று விழா, செங்கம் துக்காபேட்டையில் உள்ள தழிழ்நாடு மின்சார வாரிய அலுவலக நுழைவுவாயில் முன்பு நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை வட்ட செயலாளர் கே.சம்பத் கொடியேற்றி சம்மேளன சங்கத்தின் சாதனைகளை உரையாற்றி விளக்கினார்.
இதில் வட்ட தலைவர் பி.சம்பத், செங்கம் கோட்ட தலைவர் சி.ரவிச்சந்திரன், கோட்ட செயலாளர் எஸ்.சக்திவேல் உள்ளிடோரும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் மாறன், மணிகண்டன், சின்னசாமி, அண்ணாமலை, வேலாயுதம், திருமலை என ஆரணி, சேத்பட்டு உள்ளிட்ட கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
– செங்கம். மா.சரவணக்குமார்.