தமிழக சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமனம்!

natham viswanathanpr291114_SO_1541 copy

தமிழக சட்டப்பேரவை முன்னவராக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது முதல்வராக உள்ளார்.

இதனால், சட்டப்பேரவை புதிய முன்னவராக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in