ஏற்காட்டில் ஆறுகளை ஆய்வு செய்ய, சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், ஏற்காடு தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
இதனால் ஏற்காடு தாசில்தார் ஆய்வு செய்து, ஏற்காட்டில் உள்ள தனியார் எஸ்டேட்களில் அனுமதியின்றி 50 தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீரை எடுத்து வந்தது குறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் அறிக்கை கொடுத்தார்.
நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், சேலம் கோட்டாட்சியர் லலிதாவதி தலைமையில், ஏற்காடு தாசில்தார் சாந்தி, சேலம் தெற்கு தாசில்தார் மணிவண்ணன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சுமித்ரா பாய், ஏற்காடு வனதுறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை ஏற்காட்டில் உள்ள தடுப்பணைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதனால் இன்று கோட்டாட்சியர் தலைமையிலான குழு, ஏற்காட்டில் ஆய்வை துவங்கியது. இதன்படி இன்று வசம்பாடி எஸ்டேட்டில் உள்ள 5 தடுப்பணைகள், திப்ரவரி எஸ்டேட்டில் உள்ள 2 தடுப்பணைகள், வைல்டு ஆர்சிட் எஸ்டேட்டில் உள்ள 3 தடுப்பணைகளை ஆய்வு செய்தனர்.
மீதமுள்ள தடுப்பணைகளை நாளை ஆய்வு செய்வோம் என்றனர்.
-நவீன் குமார்.