ஏற்காடு தாலுக்காவில் உள்ள சொரக்காய்ப்பட்டி கிராமத்தில் கமலேசன்(40) என்பவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேலுக்கு, ஏற்காடு,சொரய்க்காப்பட்டி கிராமத்தில் கஞ்சா வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரின் உத்தரவின்படி டி.எஸ்.பி.சந்திர சேகர் மற்றும் ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் ஏற்காடு காவல் துறையினர் அந்த கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது கமலேசன் நிலத்தில் 4 சென்ட் நிலத்தில், மக்காச்சோளம் செடிகளுக்கிடையே ஊடுபயிராக கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா செடிகளை காவல் துறையினர் பறித்து குவியலாக்கி எரித்து அளித்து விட்டனர். கமலேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-நவீன் குமார்.