ஏற்காடு தாலுக்கா, செம்மநத்தம் ஊராட்சியில், ஒலக்கோடு கிராமத்தில் இருந்து செம்மநத்தம் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு 10 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் பைப் அமைத்துள்ளனர்.
3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் பைப் உள்ளது. ஆனால், தண்ணீர் எந்த கிணறு, ஏரியில் இருந்தும் எடுப்பது கிடையாது. இரு கிராமங்களுக்கு நடுவே வெறும் பைப் மட்டுமே உள்ளது. மோட்டர், தண்ணீர் தொட்டி ஏதும் கிடையாது. பைப் ஆரம்பம் இணைப்பேதும் இல்லாமல் வெட்ட வெளியில் கேட்பாரற்று கிடக்கிறது.
பைப் திறப்பு விழா அன்று மட்டுமே வேறு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகம் செய்தனர்.
இந்த பைப் அமைக்கும் பணி முடிந்த பிறகு ஆய்வு செய்து, அதற்கான பில் தொகையை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், பில் தொகை மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் மட்டும் இதுவரை வரவில்லை. தண்ணீருக்காக அப்பகுதி கிராம மக்கள் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.
-நவீன் குமார்.