இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (09.12.2014) மாலை 5 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா வந்தடைந்தார்.
அவருக்கு சித்தூர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஆந்திர காவல்துறையினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலப்ரி சென்ற மகிந்த ராஜபக்சே, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார்.
இன்று (09.12.2014) இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் மகிந்த ராஜபக்சே, நாளை (10.12.2014) அதிகாலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் சுப்பரபாத சேவையின் போது, ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
மகிந்த ராஜபக்சே வருகையை முன்னிட்டு திருப்பதி, ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலைப்பாதை, உள்ளிட்ட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, வாகன சோதனை நடைபெற்றது.
-ஆர்.மார்ஷல்.