சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் எனும் ஹோட்டல் உள்ளது. இங்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக மின்னாம்பள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன் (43) என்பவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு பணி பார்த்துக்கொண்டிருந்த இவர், இன்று (14.12.2014) காலை செக்யூரிட்டி அலுவலக படிக்கட்டில் வழுக்கி விழுந்து நெற்றியில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் துறையினர், பிரேதத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல் துறையினர் சம்பவ இடத்தில் கிடைத்த இரத்த மாதிரிகளை சேகரித்தும்,ஹோட்டல் ஊழியர்களை விசாரணை செய்தும் வருகின்றனர்.
-நவீன் குமார்.