நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலச்சரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ., அப்போது நிலக்கரி சுரங்கத் துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை ? என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடன் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று (16.12.2014) உத்தரவிட்டுள்ளது.
மேலும், மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து ஜனவரி 27ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஹிண்டால்கோ நிறுவன வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய சிபிஐ கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிலக்கரி துறை செயலர் பி.சி.பரேக் தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் மேலானப் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in