ஏற்காடு தாலுக்கா, மாரமங்களம் பஞ்சாயத்தில் உள்ள மாரமங்கத்தில் 100- க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் நடுவில் உள்ள பொது கிணற்றில் கழிவு நீர் கலந்து மாசடைந்து விட்டது. இதனால் இந்த கிணற்று நீரை பொது மக்கள் எந்த தேவைக்கும் பயன்படுத்துவது கிடையாது.
இந்த இடத்தில் நிலத்தடி நீரின் அளவு அதிகளவில் இருப்பதால் கிணற்றுக்கு அருகில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீரையே குடிக்க மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக கிணற்றில் அதிகளவில் கழிவு கலப்பதால், ஆழ்துளை கிணற்றின் நீரும் மாசடைந்து விட்டது. இதனால் குடிநீருக்கு பெருமளவில் பஞ்சம் ஏற்ப்பட்டுள்ளது.
எனவே, இந்த கிணற்றை மூட வேண்டும் என பொதுமக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நவீன் குமார்.