தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில், ‘மின்சார சிக்கன வாரம்’ டிசம்பர் 14 முதல் 20 வரை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் துறை அலுவலர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் தாங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனால், தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் பின்னர் அதனை சரி செய்தனர்.