ஏற்காடு, மஞ்சக்குட்டை பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில், கடந்த வெள்ளிகிழமை காட்டெருமை ஒன்று, காலுடைந்து எழ முடியாத நிலையில் கிடந்தது.
இது குறித்து உடனடியாக ஏற்காடு வனதுறைக்கு, செல்வராஜ் தகவல் அளித்துள்ளார். ஆனால், வனதுறையினர் கடந்த 4 நாட்களாக இந்த காட்டெருமையை பார்க்க கூட வரவில்லை.
காட்டெருமை 4 நாட்களாக விழுந்த இடத்தை விட்டு நகர கூட முடியாமல் இருந்ததால், அப்பகுதி இளைஞர்கள் காட்டெருமைக்கு இலை, தழைகளை உணவாக கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காட்டெருமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தகவலை தெரிந்த வனதுறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இருப்பினும் காட்டெருமை கவலைக்கிடமாக அங்கேயே படுத்து கிடக்கிறது.
-நவீன் குமார்.