இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மாயம்!- விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பெயர் பட்டியல் விபரம்!

மாயமான விமானம்.

மாயமான விமானம்.

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா QZ 8501 (Airbus A320-200 with the registration number PK-AXC) விமானம் புறப்பட்ட 42 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது.

AirAsia-Airbus-A320-200

தற்போது விமானம் எங்கே இருக்கிறது? என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமான கோளாறு காரணமா அல்லது பயங்கரவாதிகள் சதி ஏதும் இருக்குமோ? என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

AirAsia Indonesia flight QZ8501  passengers list.jpg1 AirAsia Indonesia flight QZ8501  passengers list.jpg2

விமானத்தில் பயணம் செய்த  பயணிகளின் பெயர் பட்டியல்.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பெயர் பட்டியல்.

ஏர் ஏசியா QZ 8501 விமானம், சுர்பயா விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.40 மணியளவில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் மாற்று பாதையில் திரும்பியது தெரிய வந்தது. காலை 7.24 க்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 138 பெரியவர்கள், 16 குழந்தைகள்,1 கைகுழந்தை  உள்பட 155 பயணிகளும், 2 விமானிகளும் , 4 பணிப்பெண்களும், 1 பொறியாளரும் ஆக மொத்தம் 162 பேர் அந்த விமானத்தில் இருந்தனர்.

surabaya_airport

sub_airport 1 sub_airport-tc

family members and realatives family members and realatives.jpg1

பயணிகளின் உறவினர்கள் சுர்பயா விமான நிலையத்தில் கண்ணிரோடு காத்து இருக்கின்றனர்.

பயணிகளின் உறவினர்கள் சுர்பயா விமான நிலையத்தில் கண்ணிரோடு காத்து இருக்கின்றனர்.

இதில் 156 இந்தோனேஷியர்கள், 3 தென் கொரியர்கள், 1 சிங்கப்பூர், 1 பிரிட்டன், 1 மலேசியன் இருந்தனர்.

இந்த விமானம் காலை 8. 30-க்கு சிங்கப்பூர் ஷாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. துரதிஷ்டவசமாக 162 பேருடன் கிளம்பிய விமானம் குறித்து தகவல் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. பயணிகளின் உறவினர்கள் சுர்பயா விமான நிலையத்தில் கண்ணிரோடு காத்து இருக்கின்றனர்.

பயணிகள் நிலை குறித்து அறிந்து கொள்ள +622129850801 என்ற அவசர தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.மார்ஷல்.