இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜப்பட்சேவுக்கு ஆதரவாக, இந்தி(ய) நடிகர் சல்மான்கான் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இலங்கை சென்றுள்ளார். இதற்காக இவருக்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொழும்பை சென்றடைந்த நடிகர் சல்மான்கான், கொழும்பு பொரளையில் நடைபெற்ற மகிந்த ராஜப்பட்சே பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலிண் பெர்ணான்டஸும் கலந்து கொண்டுள்ளார்.
இவரும் இன்று காலை சல்மான்கானுடன் இலங்கை வந்திருந்த நிலையில், இவருக்கு ரூ.125 கோடி சம்பளம் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சமீரா ரெட்டி உள்ளிட்ட இன்னும் பல திரைப்பட நடிகைகளும், மகிந்த ராஜப்பட்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை தனது பிரச்சார மேடைகளில் ஏற்றுவதன் மூலம், ஆளுங்கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெருமளவிலான பொதுமக்களை வரவழைக்க முடியும் என்று, மகிந்த ராஜப்பட்சேவின் தலைமை நம்புகிறது.
இதற்கு தமிழக மக்களும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-எஸ்.சதிஸ்சர்மா.