ஏற்காடு தாலுக்காவில் உள்ள மக்களுக்கு, டவுன் கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழக அரசின் இலவச வேட்டி,சேலை பொது மக்களுக்கு வழங்கும் பணியை ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை துவங்கி வைத்தார். இன்று ஏற்காடு டவுன் பகுதி மக்களுக்கு வேட்டி,சேலை வழங்கப்பட்டது.
இவருடன் சேலம் மாவட்ட துணை ஆட்சியர் ராஜ்குமார், ஏற்காடு தாசில்தார் சாந்தி, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஜான்சி ஆரிப்பால், ஆறுமுகம், புகழேந்தி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
-நவீன் குமார்.