கிராம உதவியாளர்கள் ஆர்பாட்டம்!

ye0201P1

பொங்கல் போனஸ் உயர்வு வேண்டி, ஏற்காடு தாலுக்கா அலுவலக வாயிலில் கிராம உதவியாளர்கள் இன்று மாலை ஆர்பாட்டம் செய்தனர்.

கிராம உதவியாளர்களுக்கு, வருடா வருடம் பொங்கலுக்கு போனஸ் தொகையாக ரூ.1000 தமிழக அரசு அளித்து வருகிறது. இது போதாது என்றும், இந்த வருடம் இரண்டாம் நிலை படி ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள விகிதத்தில் ரூ.4000 அளிக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டம் நடத்தினர்.

நவீன் குமார்.