அன்னப்பறவையா? வெற்றிலையா? இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி யாருக்கு?  

srilanka president  election 2015

இலங்கையில் 8-வது ஜனாதிபதி தேர்தல் ஜனவரி-8 ந்தேதி நடைபெறவுள்ளது.

அத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் இலங்கையின் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்சவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மைத்திரிபால சிறிசேன உள்பட 19 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவுக்கு வெற்றிலையும், மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்னப்பறவையும் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டில் இரண்டு முக்கிய வேட்பாளர்களான மைத்திரிபால சிறிசேன 10-வது இடத்திலும், மஹிந்த ராஜபக்ச 16-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

வேட்பாளர்களின் பெயர்களும், அவர்கள் போட்டியிடும் சின்னங்களும் :

srilanka election

  1. அய்யத் முஹமட் இலியாஸ் – இரட்டைக்கொடி
    02. இப்ராகிம் மிப்லார – வண்ணத்துப்பூச்சி
    03. பிரசன்ன பிரியங்கர – கார்
    04. விமல் சிந்தனகே – கிரிக்கெட் துடுப்பு மட்டை
    05. ஸ்ரீதுங்க ஜயசூரிய – ஓட்டோ (முச்சக்கர வண்டி)
    06. எம்.பீ. தெமின்முல்ல – சிறுவர் சேமிப்பு உண்டியல்
    07. பால விகே சிறிவர்த்தன – கத்திரிக்கோல்
    08. துமிந்த ஹமுவ – லாந்தர் (சிமினி விளக்கு)
    09. மனமே பிரின்ஸ் சொலமன் அனுரலியானகே கங்காரு
    10. மைத்திரிபால சிறிசேன – அன்னப்பறவை
    11. முனசிங்ஹ பேதுரு ஆராச்சி – தேநீர் அருந்தும் கோப்பை
    12. அநுருத்த பொல்கம்பல – மூக்குக்கண்ணாடி
    13. பத்தரமுல்ல சீலரத்னதேரர் – உழவு மிசின் (ரைக்டர்)
    14. சரத் மனமேந்திர – அம்பு வில்லு
    15. ஆராச்சிகே ரத்நாயக்க சிறிசேன – ஒற்றைக்கொடி
    16. மஹிந்த ராஜபக்ஸ – வெற்றிலை
    17. நாமல் ராஜபக்ஸ – தொலைபேசி
    18. சுந்தரம் மகேந்திரன் – மேசை
    19. ஜயந்த குலதுங்க – கலப்பை

நடைபெறவுள்ள தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு தோல்வி ஏற்பட்டால், சுதந்திரக் கட்சியை, சந்திரிகா கைப்பற்றிவிடுவார் என்று, கட்சி வட்டாரங்களுக்குள் எழுந்த சந்தேகத்தை அடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் அதாவது, ஜனவரி 8 ந்தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முடிவு செய்துள்ளது.

-எஸ்.சதிஸ்சர்மா.