மேற்கு வங்க மாநிலம், திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,யும், மம்தா பானர்ஜிக்கு விசுவாசமானவருமான அபிஷேக் பானர்ஜி என்பவருக்கு, மிட்னாப்பூர் மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் வாலிபர் ஒருவர் சராமாரியாக தாக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.பி.,யை அறைந்த அந்த வாலிபர், தங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என திரிணமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அவர் வெளி ஆள் எனவும் கூறியுள்ளது. எம்.பி.,யுடன் போட்டோ எடுக்க வேண்டும் எனக்கூறி மேடையேறிய வாலிபர், எம்.பி.,யை எதற்காக தாக்கினார் என்பது தெரியவில்லை.
எம்.பி.,யை தாக்கிய கோபத்தில், அந்த வாலிபரை கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த வாலிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-எல்.வினித்.