ஏற்காடு டவுண் பஞ்சாயத்தில் ரெட்ரீட் கல்லூரிக்கு அருகில் உள்ள அரசு புற்போக்கு நிலத்தில் கடந்த 10 -ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சவுக்கு மரங்களை வெட்டி கடத்தியுள்ளதாக ஏற்காடு காவல் நிலையத்தில், ஏற்காடு டவுண் வி.ஏ.ஓ. பாஸ்கர் ஆனந்த் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் 3 இலட்சத்திற்கு மேலிருக்கும் என்றனர். ஏற்காடு காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-நவீன்குமார்.