ஏற்காட்டில் புகைப்பட கலைஞர்கள் சங்க கூட்டம்!

 ye1201P2ஏற்காடு அண்ணா பூங்காவில் ஏற்காடு பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. சேலம் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராஃபர்கள் நலசங்க மாவட்ட தலைவர் சூர்யா தலைமையில் கூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு ஏற்காடு கென்னடி, சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரசு துறை சார்ந்த இடங்களில் புகைப்பட தொழில் செய்வதற்கு பெறப்படும் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், புகைப்பட கலைஞர்களுக்கென தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், சங்க உறுப்பினர்களுக்கு 1 இலட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீடு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 25-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு ரகுராஜ் நன்றி கூறினார்.           

 -நவீன்குமார்.