ஏற்காட்டில் உள்ள வேளாண்துறை அலுவலகம் சார்பில், உணவு தானிய உற்பத்தியை பெருக்கும் வகையில் விவசாய குழுக்களை சார்ந்தவர்களை, அவரவர் விவசாய நிலங்களுக்கே சென்று ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறையை விவரித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 6 உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை சென்று ஆலோசனைகள் வழங்குகின்றனர். இத்திட்டத்தின் இலக்கு இரண்டாம் பசுமை புரட்சியின் இருமடங்கு உற்பத்தி ஆகும்.
-நவீன்குமார்.