போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது உத்தியோக பூர்வமான டிவிட்டர் தளத்தில் முதல் தடவையாக இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமான போப்பாண்டவர் பிரான்சிஸ். அதற்கு முன்னதாக அவர் தனது உத்தியோகபூர்வமான டிவிட்டர் தளத்தில் “இறைவன் இலங்கையை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக” என்று தமிழ் மொழியில் தனது ஆசிச்செய்தியை பதிவு செய்துள்ளார்.
போப்பாண்டவர் ஒருவர் தனது ஆசியை முதல் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்ட நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆர்.மார்ஷல்.