ஆற்றை மறித்து பிளாட் போட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய வருவாய்துறையினர்!

ye2501P3

ஏற்காடு டவுண் பஞ்சாயத்திற்குட்பட்ட, பெட்பெட்ரோடு சாலை அருகே, சேலத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில், ஆற்றை மறித்து பிளாட்போடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஏற்காடு வி.ஏ.ஓ பாஸ்கர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்ததில் ஆற்றின் அகலத்தை குறைத்து சிறிய அளவிலான பைப் அமைத்து அதன் மீது மண் கொட்டி பிளாட் அமைக்கும் முயற்சி நடைபெறுவது அறிந்து பிளாட் போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.

ஏற்காடு வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கூறி ஆற்றை மறித்தவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சென்று விட்டனர். இதுபோலவே அப்பகுதியில் மேலும் இரண்டு நில உரிமையாளர்கள் இதே போன்று ஆற்றை மறித்து வீடு கட்டியிருந்தது தெரிய வந்தது.

இதுபோல ஏற்காட்டில் ஒரு மாதத்திற்கு முன்னர் ஆற்றை மறித்து கட்டியிருந்த தடுப்பணைகளை, சேலம் மாவட்ட நிர்வாகத்தினர் இடித்து தள்ளியது குறிப்பிடதக்கது.

-நவீன் குமார்.