அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று காலை சரியாக 9.45 மணிக்கு புதுடெல்லி விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பிரதமர் நரேந்திர மோதியை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோதி, அதிபர் ஒபாமாவை ஆரத்தழுவி வரவேற்றார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் முப்படை வீரர்கள் அணிவகுப்பு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்புடன், அதிபர் ஒபாமா அழைத்து வரப்பட்டார்.
மதியம் 11.55 மணிக்கு ஒபாமா ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், ஆகியோர் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் தூவினார். மகாத்மா காந்தி சமாதியில் ஒபாமா ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
ஒபாமா வருகையால் மகாத்மா காந்தி நினைவுடத்தில் மலர் வளையங்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒபாமா, மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
ஜனாதிபதி மாளிகையில் ஒபாமா வருகைக்காக காத்திருந்த பிரபலங்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
ஐதராபாத் இல்லத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, பிரதமர் நரேந்திர மோதி மதிய விருந்து அளித்தார்.
பின்னர் மாளிகை புள்வெளியில் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நடந்து கொண்டே பேசினர்.
ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தோட்டத்தில் இருந்தபடி இருவரும் பேசிக் கொண்டனர்.
கோப்பையில் தேநீரை ஊற்றி அதிபர் ஒபாமாவிற்கு, பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார். அவர்கள் நடைபயணமாக பேசிக் கொண்டு சென்றனர். சுமார் 10 நிமிடம் அமைதியான சூழலில் பேசிக்கொண்டனர்.
இரதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.
பிரதமர் நரேந்திர மோதியும், ஒபாமாவும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
-சி.மகேந்திரன்,
-எஸ்.சதிஸ் சர்மா.