பொது கழிவறையில் இறந்து கிடக்கும் மாடு! கண்டு கொள்ளாத யூனியன் நிர்வாகம்!

ye2801P1

சேலம் மாவட்டம், ஏற்காடு டவுண் பஞ்சாயத்திற்குட்பட்ட மேழ் அழகாபுரம் கிராமத்தில் உள்ள பொது கழிவறையில் பாதி அறைகள் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் கடந்த ஒரு வருடமாக உள்ளது.

இதனால் அப்பகுதி அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது. இதை அப்பகுதி வார்டு உறுப்பினரும், யூனியன் நிர்வாகத்தினரும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கழிவறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாடு ஒன்று இறந்த நிலையில் கிடக்கிறது.  இதையும் யூனியன் நிர்வாகத்தினர் அப்புறபடுத்தாமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த மாட்டையும் அங்குள்ள குப்பைகளையும் அப்புறபடுத்தி கழிவறையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.

-நவீன் குமார்.