ஏற்காடு டவுன் பகுதியில் ஏற்காடு லைப்ரரி கிளப் எனும் இடத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை அந்த லைப்ரரி கிளப்பை சேர்ந்தவர்கள், ஆக்கிரமித்து கம்பி வேலி போடும் முயற்சி நடப்பதாக ஏற்காடு பி.டி.ஓ. விற்கு தகவல் வந்தததை அடத்து, ஏற்காடு டவுண் பி.டி.ஓ. ஜெயராமன், ஊரக பி.டி.ஓ. துளசிராமன், துணை சேர்மேன் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அங்கு ஆக்கிரமிக்கபடும் நிலம் ஏற்காடு யூனியனிற்கு சொந்தமானது என்றும், வேலி போடக்கூடாது என கூறினர்.
அப்போது லைப்ரேரி கிளப்பை சேர்ந்தவர்கள் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது என்றும், எனவே, நிலத்தில் வேலி போடுவோம் என்றனர். இவ்வாறு இருதரப்பினரும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர்.
பின்னர் வருவாய்துறையினரினால் நிலம் அளக்கப்பட்டு, நிலம் யாருடையது என்று சரிப்பார்க்கும் வரை வேலி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்று கூறி சென்றனர்.
-நவீன் குமார்.