வருவாய் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!  

ye1102P1

வருவாய் துறையினர் சார்பில் ஏற்காடு டவுண் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பேரணி தாசில்தார் கிருஷ்ணன் தலைமையில் துவங்கியது. ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஒண்டிக்கடை பகுதியில் பேரணி நிறைவடைந்தது.

பேரணியில் வி.ஏ.ஓ.க்கள் ராஜசேகர், பாஸ்கர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர்கள் கணேசன், உட்பட கிராம உதவியாளர்கள் என 60 பேர் கலந்துக்கொண்டு மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ்களை வழங்கினர்.

-நவீன் குமார்.