இந்தியாவின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (15.02.2015) மாலை 5.35 மணிக்கு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், அவரது மனைவி ஜெயந்தியையும், அவர்கள் தங்கும் ஹோட்டலில் இலங்கை சிறுவர்கள் வரவேற்றனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிர, இந்தியாவிற்கான இலங்கை தூதர் சுதர்சன் செனவிரத்ன ஆகியோர் உடன் இருந்தனர்.
-சி.மகேந்திரன்.