ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, ஏற்காடு அ.இ.அ.தி.மு.க.-வினர் ஏற்காடு சேர்மேன் அண்ணா துரை மற்றும் துணை சேர்மேன் சுரேஷ் குமார் தலைமையில் ஏற்காடு பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, வெள்ளக்கடை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், மாணவரணி செயலாளர் புகழேந்தி, பாலு, மனோ, அன்பு, முருகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
-நவீன் குமார்.