கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா!  

katchathveeu

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா, பிப்ரவரி 28–ந் தேதி  முதல் மார்ச் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.  இதேபோல் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை ஏற்றி செல்வதற்காக 105 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி இன்று முதல் வருகிற 1–ந் தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது என்று மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-சி.மகேந்திரன்.