சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள “தேசாய்ஸ் மவுண்ட்” என்ற தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்த திருச்சி, சமயபுரம் பகுதியை சேர்ந்த மல்லேந்திரன்(வயது 13) எனும் மாணவன், மதிய உணவு இடைவெளியின் போது, பள்ளியின் சமையல் அறை மீது உள்ள கூரை மீது ஏறி விளையாடி கொண்டிருந்த போது, சமையலறை வெளிச்சத்திற்காக கூரை மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பகுதியில், கவனக் குறைவாக கால் வைத்தபோது, கண்ணாடிப் பகுதி உடைந்து கீழே விழுந்துள்ளான்.
பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவனை பரிசோதித்து மருத்துவர், மாணவன் இறந்து விட்டதாக கூறினார்.
பின்னர் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-நவீன்குமார்.