சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள சேர்வராய்ஸ் ஹோட்டல் மற்றும் சேர்வராய் கேட்டரிங் கல்லுரி இணைந்து ஏற்காடு திறந்தவெளி கலையரங்கத்தில் சாலையோர உணவு திருவிழாவை காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறப்பாக நடத்தினர்.
சேர்வராய்ஸ் நிறுவணத்தின் 45 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மக்கள் விரும்பி சாப்பிடும் வகையில் வித விதமான உணவு வகைகளை சமைத்து மாணவர்கள் பரிமாறினர்.
மாணவர்கள் கல்லுரியில் பயிலும் போதே, எதிர்காலத்தில் தாங்கள் செய்யும் வேலையை திட்டமிட்டு பணியாற்ற இந்த உணவு திருவிழா நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வுணவு திருவிழா நல்ல முறையில் நடைபெற பல்வேறு உதவிகளை சேர்வராய்ஸ் குழும தலைவர் தேவதாஸ் வழங்கியதாக, சேர்வராய்ஸ் ஹோட்டல் மேலாளர் கதிரவன் கூறினார்.
இவ்வுணவு திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், கான்ப்புளுயன்ஸ் ஹோட்டல் மேலாளர் மீரா குமார் ஆகியோர் கல்ந்துக்கொண்டனர்.
பின்னர் மாலையில் சேர்வராய்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, கேட்டரிங் கல்லுரி, சேர்வராய்ஸ் வேலி ஸ்கூல் உள்ளிட்டவைகளின் ஆண்டு விழா நடைப்பெற்றது.
-நவீன்குமார்.